தனித்தே ஆட்சியமைப்போம்.. ஜெ. முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தனித்தே ஆட்சி அமைப்போம், கூட்டணிஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னையில் நடந்த அதிமுகபொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டான்சி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில்செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர்காளிமுத்து தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.

பல முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியத் தீர்மானம்சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தனித்துத்தான் ஆட்சி என்பது.

முன்னதாக கூட்டம் துவங்கியதும், நெடுஞ்செழியனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.அவைத் தலைவராக காளிமுத்துவை நியமித்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தைஜெயலலிதா முன்மொழிந்தார். பிறகு கூட்டத்திற்கு காளிமுத்து தலைமை தாங்கினார்.

பின்னர் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்.

  • தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடக்கும் சட்டசபைத் தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அதிமுக அமைக்கும். இதுவே நமது லட்சியம். அதற்குத் துணை நிற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தீர்மானம் உரிமை தருகிறது.

  • கருணாநிதியின் குடும்ப அரசியலால் மதுரையில் நடந்த வன்முற்ை சம்பவங்களுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. இதற்கான நஷ்ட ஈட்டை கருணாநிதியே செலுத்த வேண்டும்.

  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொதுக்குழு கண்டிக்கிறது.

  • இந்தியரே இல்லை என்று கூறிய தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை வீரப்பனிடம் தூதராக அனுப்பியதை பொதுக்குழு கண்டிக்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தீர்மானங்கள் நிறைவேறிய பிறகு தலைவர்கள் பேசினர். அனைவரும் முதல்வர்கருணாநிதியையும், அவரது ஆட்சியையும் விமர்சித்தே பேசினர். இறுதியாகஜெயலலிதா பேசினார்.

    ஜெயலலிதா பேசுகையில், நம்மை அழிக்க எதிரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி வலைபின்னுகிறார்கள். அவர்களை நாம் முறியடிக்க வேண்டும்.

    டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, மக்கள் மன்றத்திற்கு முன்புசாதாரணமானது. மக்கள் அடுத்த தேர்தலில் நமக்கு அளிக்கப் போகும் தீர்ப்பு, இந்தத்தீர்ப்பை தவிடுபொடியாக்கும்.

    நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மிரட்டல் மூலம் என்னை பணிய வைக்கமுடியாது. அதிமுக தொண்டர்களாகிய சிங்கங்களுக்கு நான் தாய் போல. எனவேநானும் சிங்கம்தான்.

    வருகிற தேர்தலில் தனித்து ஆட்சியைப் பிடிப்போம். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுஎம்.ஜி.ஆர்.ஆட்சியை அமைப்போம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+