சீதாராம் கேசரி மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Kesariகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திய அரசியலில் மறக்கமுடியாதவருமான சீதாராம் கேசரி செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

84 வயதாகும் சீதாராம் கேசரி நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் டெல்லிஅகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கேசரிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி முன்பேமரணமடைந்து விட்டார். கால் முறிவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கேசரிஅக்டோபர் 12-ம் தேதி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

ஆறு நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டதால், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே அவர் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்தபோது, பல அரசியல் சூறாவளியைஇந்திய அரசியல் சந்தித்தது. இந்திரா காந்தியால் அரசியலுக்கு வந்தவர் கேசரி. பீகார்மாநிலத்தைச் சேர்ந்தவர்.

1976-ம் ஆண்டு பீகார் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன் பிறகுஅவருக்கு தோல்வியே கிடைத்ததில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குஅவர் உயர்ந்தபோது, கட்சியின் பெயர் படுமோசமான நிலையில் இருந்தது.

16 ஆண்டுகள் கட்சியின் பொருளாளராக இருந்த கேசரி, 1996-ம் ஆண்டு கட்சித்தலைவரானார். பின்னர் நரசிம்மராவை லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவர்பதவியிலிருந்து நீக்கினார். கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

தொண்டர்களின் ஆதரவு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவே கேசரிக்கு இருந்தது.ஒரே ஒரு முறை மட்டுமே அவர் லோக்சபா தேர்தலில் (1971, கத்தியார் தொகுதி)வெற்றி பெற்றார். அதன் பிறகு பலமுறை ராஜ்சயபா எம்.பி.யாக இருந்துள்ளார்.

1997-ம் ஆண்டு பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக கடுமையாக முயன்றார்.ஆனால்அதற்கு ஐக்கிய முன்னணியும், காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைப்பு தராததால் அவரதுஆசை நிராசையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+