மனைவி, மகன், மகளை எரித்துக் கொன்ற தொழிலாளி
மதுரை:
மதுரையில் குடும்பப் பிரச்சினையில் ஆத்திரமடைந்த கட்டடத் தொழிலாளி, தனதுமனைவி, குழந்தைகள் உள்பட மூன்று பேரை தீவைத்துக் கொளுத்தினார்.
மதுரையிலுள்ள கோமதிபுரம் என்ற பகுதியில செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொடூரச்சம்பவம் நடந்தது
குடும்பத்தை எரித்தவர், மகளின் திருமணத்திற்காக, மனைவியிடம் அவரதுபெற்றொரிடமிருந்து பணம் வாங்கி வரச் சொல்லியுள்ளார். மனைவியும் பணம் வாங்கிவந்துள்ளார். ஆனால் பணம் போதவில்லை என்று கூறி மனைவியிடம் அவர் சண்டைபோட்டுள்ளார்.
சண்டை முற்றவே, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவி, 20 வயதுமகன், 18 வயது மகள் ஆகியோர் மீது ஊற்றித் தீவைத்துள்ளார். இதில் மகள்அங்கேயே கருகி இறந்தார். மனைவி, மகன் ஆகியோர் அரசு ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை காலை இறந்தனர்.
இந்த சம்பவத்தில், அந்த நபரும் காயமடைந்தார். அவர் தற்போது ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications