அதிமுக தீர்மானம்: "நோ பிராப்ளம் என்கிறது த.மா.கா.
சென்னை:
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு துணை நிற்கும் கட்சிகளுடன் தான் கூட்டு என்றுஅதிமுக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தினால் அதிமுக- தமாகா உறவில் எந்தபாதிப்பும் ஏற்படாது என்று தமாகா வட்டாரம் தெரிவித்தது.
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டால் அதிமுக விரும்பும் எம்ஜிஆர்ஆட்சியை மூப்பனார் தலைமையில் தான் அமைத்தாக வேண்டும் என்றும் தமாகாதெரிவித்தது.
சென்னையில் செவ்வாய் கிழமை கூடிய அதிமுக பொதுக்குழுவில் "தமிழகத்தில்ஜெயலலிதா தலைமையில் எம்ஜிஆர் ஆட்சியையும், பாண்டிச்சேரியில் அதிமுகஆட்சியையும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் தமாகாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதால் தமிழகஅரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதத்தில் சிதம்பரத்தில்கூடிய தமாகா செயற்குழுவில், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிக்குதான் தமாகா ஆதரவளிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போதே அதுபற்றி கருத்துக் கூறிய ஜெயலலிதா, அதிமுக ஒருபோதும் கூட்டணிஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளாது என்றார். அதே கருத்தை வலியுறுத்தியும்,தமாகாவின் கூட்டணி ஆட்சி தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அதிமுகபொதுக் குழுவில் இந்த தீர்மானத்தை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த திட்டவட்டத் தீர்மானத்தால் தமாகாவுடனான உறவில் சிக்கல்ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், தமாகா வட்டாரம் வழக்கம் போல் அதைசீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், இந்த தீர்மானத்தால் கூட்டணி உறவில் எந்தபாதிப்பும் ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறது.
இதுகுறித்து தமாகா மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுகவின் தீர்மானத்திற்குவிசேஷ முக்கியத்துவம் அளிக்க தமாகா விரும்பவில்லை. ஏனெனில் அதிமுக போன்றபெரிய கட்சி ஆட்சி அமைக்க நினைப்பதும், அதை வலியுறுத்தி தீர்மானம்நிறைவேற்றுவதும் புதிதல்ல.
அக்கட்சித் தொண்டர்களை திருப்திப்படுத்தும் வகையில் அக்கட்சித் தலைமைசெயல்பட்டுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம். ஆனால், நடைமுறையில் அதுசாத்தியமா என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தான் தெரிய வரும்.
டான்சி தீர்ப்பு காரணமாக தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்ற கேள்விஎழுந்துள்ளது. இதற்கு சட்டரீதியாக அவர் தீர்வு கண்டாக வேண்டும். அந்த தீர்வுஎத்தகையது என்பதை இப்போதே ஊகிக்க முடியாது. எனவே எங்களுக்கு எந்தகுழப்பமும் இல்லை. மேலும் அதிமுகவின் ஆசையான எம்ஜிஆர் ஆட்சி என்பதைதமாகாவும் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளும்.
எம்ஜிஆர் நல்லாட்சியே கொடுத்தார் என்பது தமாகா கருத்து. அதனால் தமாகாவலியுறுத்தும் காமராஜர் ஆட்சியும், ஜெயலலிதா வலியுறுத்தும் எம்ஜிஆர் ஆட்சியும்இணைந்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் கூட்டணி ஆட்சி அமையும் என்றுநாங்கள் திடமாக நம்புகிறோம் என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications