இலங்கையில் 25 தமிழர்கள் அடித்துக் கொலை
கொழும்பு:
இலங்கையின் மத்திய பகுதி நகரான பந்தாரவலா என்ற இடத்தில் மறுவாழ்வு முகாமில்வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மீது சிங்கள இனத்தவர் நடத்திய கொலை வெறித்தாக்குதலில் 25 தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. பந்தராவலா என்ற இடத்தில் முகாம்ஒன்று உள்ளது. அரசுக்குச் சொந்தமான தேசிய இளைஞர் சேவை கவுன்சில் அமைப்புஇதை நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள்மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு திடீரென பந்தரவலா பகுதியிலுள்ள சிங்கள மக்கள்முகாமிற்குள் புகுந்தனர். கொலை வெறியுடன் அவர்கள் அங்கிருந்த தமிழர்கள் மீதுதாக்குதல் நடத்தினர். கற்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால்அவர்கள் தாக்கியுள்ளனர்.
வன்முறை பெரிதாகவே, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் வந்துதுப்பாக்கி சூடு நடத்தி மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 25 தமிழர்கள்உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலருடைய நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. வன்முறையில் முகாமே சூறையாடப்பட்டது.
மொத்தம் 42 தமிழர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மற்றும் கைது செய்யப்பட்டஅரசியல் கைதிகள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளுக்கு பல்வேறு மறுவாழ்வு பயிற்சிகள் இந்த முகாமில்கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முகாம் உள்ள பகுதி சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும்பகுதியில் இருந்ததாகத் தெரிகிறது.
முன்னாள் போராளிகளுக்கும், முகாம் நிர்வாகிகளுக்கும்இடையே முதலில் மோதல்வெடித்ததாகவும், இதையடுத்தே கிராமத்து மக்கள் பெருமளவில் திரண்டு வந்துதாக்குதலில் ஈடுபட்டதாகவும் பி.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications