தடை வராமல் இருக்க தாயமங்கலம் போகிறார் ஜெ.
சென்னை:
தேர்தலில் நிற்க தடை விதிக்காமல் இருப்பதற்காக தாயமங்கலம் மாரியம்மன்கோவிலில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறப்பு பூஜை செய்யவுள்ளனர்.
தாயமங்கலம் கோவிலில் நவம்பர் 1ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறப்புபூஜையும், யாகமும் நடத்துகின்றனர். தேர்தலில் நிற்க தடை ஏற்படாமல் இருக்கவேண்டி இந்த யாகம் நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 30ம் தேதி முதல் ஒரு வாரம் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். இவருடன் பொதுக்குழு உறுப்பினர்சசிகலாவும் செல்கிறார். இருவரும் ஒரே மேடையில் பேசவும் திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.
அதற்கு முன்பாக இருவரும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளதாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,யாகமும் நடத்தி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலைநிறைவேற்றக் கோரி இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், யாகமும்நடத்துவது வழக்கம்.
அதன்படி நவம்பர் 1-ம் தேதி இக்கோவிலில் ஜெயலலிதாவும், சசிகலாவும் வந்துயாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கட்சி பொருளாளரும்,எம்.பி.யுமான திண்டுக்கல் சீனிவாசன் தாயமங்கலத்தில் முகாமிட்டுள்ளார்.
இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு சுற்றுப் பயணத்தை தொடங்க ஜெயலலிதாவும்,சசிகலாவும் திட்டமிட்டுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications