கோபால், நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை காடு பயணம்?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக அரசுத் தூதர்கள் நக்கீரன் கோபால்,பழ. நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் அடங்கியகுழு ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் காட்டுக்குக் கிளம்பலாம் என்று தெரிகிறது.
ஜூலை 31-ம் தேதி தொட்டகாஜனூர் கிராமத்திலிருந்து நடிகர் ராஜ்குமார் வீரப்பன்கும்பலால் கடத்தப்பட்டார். அதன் பிறகு பல நிபந்தனைகளை விதித்தார். இருப்பினும்சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு காரணமாக வீரப்பனின் நிபந்தனைகள்நிறைவேறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் உதவி இயக்குநர் நாகப்பா வீரப்பன் கும்பலிடமிருந்து தப்பி வந்தார்.பின்னர் அரசுத் தூதர் கோபாலுடன், நெடுமாறன் தலைமையிலான மூவர் குழுதூதர்களாக சேர்ந்தது. இந்தக் குழுவினர் காட்டுக்குச் சென்று வீரப்பனிடம் பேசிராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜுவை மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வீரப்பனிடம் செல்ல நக்கீரன் கோபாலுக்கும், நெடுமாறன்தலைமையிலான குழுவினருக்கும் ஞாயிற்றுக்கிழமைக்குள், வீரப்பனிடமிருந்துசிக்னல் கிடைக்கும் என்று தெரிகிறது. அப்படிக் கிடைத்தால், இக்குழுவினர்ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டுக்குக் கிளம்புவர்.
கோபாலுக்கு இது 6-வது பயணமாக இருக்கும். புதிய தூதர்களுக்கு 2-வது பயணமாகஇருக்கும். மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது குறித்து வீரப்பன் ஆராய்ந்து வருவதாகவும், இதுதொடர்பாகவேகோபால் குழுவினருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் நக்கீரன் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலைக்குள், நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் மூலம் வீரப்பனிடமிருந்துதனக்கு சிக்னல் கிடைக்கும் என்று கோபால் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications