ஜெ.வைக் கண்டித்து பேரணி நடத்துகிறது திமுக
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று ஜெயலலிதா கூறியதைக் கண்டித்து, நவம்பர் 1-ம் தேதி தமிழகமெங்கும் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.ஆட்சியைப் பிடித்ததும் முதல் கட்டமாக முதல்வர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
இது வன்மையாகக் கண்டிக்கப்படக் கூடிய விஷயமாகும். இதைக் கண்டித்து தமிழகமெங்கும் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 1 ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தப் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடக்கும்.
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்துள்ளது. இதிலிருந்து, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு ஜெயலலிதா நடந்து கொள்கிறார் என்று அறிக்கையில் கூறியுள்ளார் அன்பழகன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications