தீவிரவாதிகள் தாக்குதலில் 18 பேர் பலி
குவஹாத்தி:
அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் தீவிரவாதிகளின் வெறித்தனமானதாக்குதலுக்கு 18 அப்பாவிப் பொதுமக்கள் பலியானார்கள்.
அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி என்ற இடத்தில் மார்வாரி சமூகத்தைச் சேர்ந்தவியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவுவந்த அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா) தீவிரவாதிகள் சரமாரியாக்சுட்டனர். இதில் 9 பேர் அங்கேயே இறந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், இந்திய-பூடான் எல்லைப் பகுதியில், மூன்றுபோலீஸ்காரர்களை போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். சோந்திப்பூர்மாவட்டம் பெஹாலி பகுதியில் ஒரு வியாபாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு திரிபுராவில், திரிபுரா தேசிய விடுதலை முன்னணி தீவிரவாதிகள், தேபேந்திராசர்தார் மார்க்கெட்டில் புகுந்து சரமாரியாக சுட்டனர். இதில் பழங்குடியினர் அல்லாதஐந்து பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடங்களுக்குப் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications