தீவிரவாதிகளை ஒழிக்கத் துடிக்கும் பூடான் பெண்கள்
குவஹாத்தி:
நாட்டில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் தங்களையும்ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் ராணுவத்தில் சேர பூடான் நாட்டு பெண்கள் விருப்பம்தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில் சேரும்படி அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவோ, நிர்ப்பந்திக்கவோஇல்லை. அவர்களே தன்னார்வமாக ராணுவத்தில் சேர விரும்புவதாக செய்திகள்தெரிவிக்கின்றன.
பூடானில் உள்ள பெண்கள் இயக்கத் தலைவர்கள் சில தினங்களுக்கு முன் பூடான் மன்னர்ஜிக்மி சிங்யீ வாங்சுக்கை சந்தித்துப் பேசினர்.
அப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலிருந்து பூடானுக்குள்தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். இதனால், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பாதிப்புஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் நாங்களும் ஈடுபட ராணுவத்தில் சேரவிரும்புவதாக மன்னரிடம் பெண்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
பூடானில் உள்ள டோங்சா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் சேர அதிகம்ஆர்வம் காட்டுகின்றனர். ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகளையும் அவர்கள்மேற்கொண்டுள்ளனர்.
அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடி வரும் ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி(உல்ஃபா), தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எம்.டி.எஃப்.பி) ஆகியவற்றின்தலைமையங்கள் பூடானில் உள்ளன.
இந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் வடகிழக்குமாநிலங்களுக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும்பூடானுக்குள் ஓடி வந்துவிடுகின்றனர்.
இவ் விரு தீவிரவாத அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் தீவிரவாதிகள் தற்போதுபூடானில் தஞ்சம் புகுந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications