சேதுராமன் மறைவுக்கு கருணாநிதி, ஜெ. இரங்கல்
சென்னை:
பிரபல நாதஸ்வர கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமான எம்.பி.என்.சேதுராமன் மரணம் குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி:
இசையுலகில், குறிப்பாக நாதஸ்வர உலகில் முடிசூடா மன்னராக விளங்கிய திருவாடுதுறை ராஜரத்தினம் அவர்களைத் தொடர்ந்து அந்தக் கலையிலேசிறந்ததோர் இடத்தைப் பிடித்து புகழ் கொடி நாட்டி வந்த மதுரை நாதஸ்வர சகோதரர்களில் மூத்தவரான திரு சேதுராமன் அவர்கள் வெள்ளிக்கிழமைநள்ளிரவு மறைந்து விட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
அண்ணன் தம்பிகள் இருவரும் என்பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள். சென்னையிலே முத்தமிழ் பேரவையின் விழா ஆண்டுதோறும் நடைபெறும்போது அத்தனைநாட்களும் சென்னையிலே தங்கியிருந்து அந்தப் பேரவையின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்கள்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தம்பி பொன்னுசாமிக்கும் எனது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதனது இரங்கல் செய்தியில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மிகப்பெரும் சாதனையாளராக விளங்கிய நாதஸ்வர கலைஞர் எம்.பி.என்.சேதுராமன்அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
நாதஸ்வர கலைஞர்களில் தலை சிறந்தவர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான எம்.பி.என்.சேதுராமன் அவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications