போலி பட்டியலை ஏற்காதீர்கள் ..தமிழக காங். தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்ட, தாலுகா அளவில் தேர்தல் நடத்தாமலேயே போலியான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் பட்டியலை தமிழக காங்கிரஸ் கமிட்டி மத்தியதேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோர் புகார்கூறியுள்ளனர்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம் ஆகியோர்இந்தப் புகாரைக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் ராம்நிவாஸ் மிர்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வரவிருக்கிறது. இதில் வாக்களிக்கத் தகுதி பெற்ற நிர்வாகிகள் பட்டியல் கட்சி மேலிடத்திற்குவழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது போலியான பட்டியல்.

டெல்லியிலுள்ள கேரளா ஹவுசில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, எம்.பி.மணிசங்கரஅய்யர் ஆகியோர் அமர்ந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப, சிலரின் பெயரைத் தேர்வு செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

கட்சி விதிமுறைப்படி, தாலுகா மற்றும் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழககாங்கிரஸ் தேர்தல் அதிகாரி சங்கர நாராயணன் அப்படிச் செய்யவில்லை. இது முறைகேடான, பாரபட்சமுள்ள செயலாகும். இந்த மோசடி பட்டியலை காங்கிரஸ்தலைமை ஏற்றுக் கொண்டால், கட்சிக்கு பெரிய ஆபத்தை அது ஏற்படுத்தும்.

சோனியா காந்திதான் மீண்டும் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார். அவரை விட்டால், காங்கிரஸ் கட்சிக்கு வேறு நல்ல தலைவர் கிடைப்பதுகடினம். அதனால் அவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற நல்லதலைவர்கள் பிறந்த குடும்பத்திலிருந்து வந்தவர் சோனியா காந்தி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கட்சி பிரச்சினை குறித்து தங்கபாலு, வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துபேசியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+