ரயில் பாதையில் குண்டு வைப்போம் .. நக்சலைட்டுகள் மிரட்டல்
காஞ்சிபுரம்:
வீரப்பன் விடுவிக்கக் கோரும் தமிழ்த் தீவிரவாதிகள் ரேடியோ வெங்கடேசனை 16நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் வேலூர் முதல் விழுப்புரம் வரையிலான ரயில்பாதையில் வெடிகுண்டு வைப்போம் என்று காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன்மாஸ்டருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதமும் இதேபோல ஒரு மிரட்டல் கடிதம் காஞ்சிபுரம் ஸ்டேஷன்மாஸ்டருக்கு வந்தது. திருப்பூரிலிருந்து இந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை இந்தக் கடிதம் வந்தது.
கடிதத்தில், ரேடியோ வெங்கடேசனை இன்னும் 16 நாட்களில் விடுதலை செய்யவேண்டும். இல்லாவிட்டால், வேலூர் முதல் விழுப்புரம் வரையிலான 125கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதையில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும்,எந்த இடத்தில் வேண்டுமானாலும் வெடிகுண்டு வெடிக்கும்.
இதற்காக தமிழ் தேசிய விடுதலைப் படையைச் சேர்ந்த மூன்று பேர் இப்பகுதிக்குள்ஊடுறுவியுள்ளனர். ரயில் பாதை முழுவதும் வெடிகுண்டுகளைப் பதிக்கும் பணியைஇவர்கள் மேற்கொள்வர். அடுத்த மூன்று மாதங்களில் சில ரயில்களிலும்வெடிகுண்டுகள் வைக்கப்படும்.
கரும்பு விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு தமிழ்த்தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து கடிதத்தில் கூறப்பட்டுள்ள ரயில் பாதை முழுவதும்போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். போலீஸ் மோப்பநாய்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications