ஐகோர்ட் தலைமை நீதிபதியை மாற்றக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை இடமாற்றம்செய்ய வேண்டும் என்ற தமிழ்ச் சான்றோர் பேரவை சுப்ரீம் கோர்ட்டிற்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

தமிழ்ச் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழண்ணல் மற்றும் நிறுவனர்நா.அருணாச்சலம் ஆகியோர் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழக கல்வி நிலையங்களில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும்என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் பாதகமான தீர்ப்பை நீதிபதிகே.ஜி.பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.

இதேபோல தமிழுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம் என்பவரைகே.ஜி.பாலகிருஷ்ணன் இடமாற்றம் செய்து விட்டார்.

மேலும், தமிழ் பயிற்று மொழி குறித்த வழக்கு முடியும் வரை இதுகுறித்து யாருமேபேசக் கூடாது என்று ஒட்டுமொத்த தடையையும் நீதிபதி பாலகிருஷ்ணன் பிறப்பித்துவிட்டார்.

தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கோரி20 தமிழ் அமைப்புகள்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன்தான்டிஸ்மிஸ் செய்தார்.

பாரபட்சமாக செயல்படும் கே.ஜி.பாலகிருஷ்ணனை சுப்ரீம் கோர்ட் இடமாற்றம் செய்துவிட்டு பாரபட்சமில்லாத, நடுநிலையுடன் செயல்படக் கூடிய நீதிபதியை அவர்இடத்தில் நியமிக்க வேண்டும். இதுபோன்ற மிக முக்கியமான வழக்குகளில் இப்படிஒரு நீதிபதி இருந்தால், நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்பதையும் எதிர்பார்க்கமுடியாது.

தமிழகத்தில் பிறந்து, தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள், தமிழில்தான் படிக்கவேண்டும் என்ற உண்மையை தமிழக மக்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கூறுவோம்.நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடக்கவுள்ள 6-வதுதமிழகப் பெருவிழாவில் இதுகுறித்து வலியுறுத்தப்படும் என்று அவர்கள்தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+