முரளிதரன் உலக சாதனையில் வீழ்ந்தது இந்தியா

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா:

ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி லீக் போட்டியில்இந்தியாவை, 68 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது. 7 விக்கெட்டுகளைவீழ்த்தி இலங்கையின் முத்தையா முரளிதரன் உலக சாதனை படைத்தார்.

இரு அணிகளுக்கும் இந்த வெற்றி, தோல்வியினால் எந்தப் பலனும் இல்லை என்றநிலையில் இரு அணிகளும் களம் கண்டன. முதலில் ஆடிய இலங்கை அதிரடியாகவிளையாடி 294 ரன்களைக் குவித்தது.

295 ரன்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை மிகவும் நெருக்கடியாகத் துவக்கியதுஇந்தியா. முதல்வர் ஓவரின் 4-வது பந்திலேயே கேப்டன் கங்குலி அவுட் ஆனார்.அப்போது அணியின் எண்ணிக்கை 2.

முக்கிய விக்கெட் விழுந்த நிலையில், அணியை வழி நடத்தும் பொறுப்பைடெண்டுல்கர் சுமந்தார். அவருக்கு ராபின் சிங் நல்ல ஆதரவாக இருந்தார். இருவரும்சேர்ந்து படிப்படியாக ரன் எண்ணிக்கையை உணர்த்தினர்.

டெண்டுல்கர் அதிரடியாக விளையாடினார். மறுபுறும் ராபின் சிங் நிதானம் காட்டினார்.54 பந்துகளைச் சந்தித்த டெண்டுல்கர் 61 ரன்களைக் குவித்தார். இதில் 7பவுண்டரிகளும் அடங்கும். 41 பந்திலேயே 50 ரன்களை எட்டினார் டெண்டுல்கர்.

டெண்டுல்கரும், ராபின் சிங்கும் சேர்ந்து ஒவ்வொரு ரன்னாக ஓடி, ஓடிச் சேர்த்தனர்.இதன் மூலம் இலங்கை பீல்டர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். இருவரும்சேர்ந்து 75 ரன்களைச் சேர்த்தனர்.

அந்த சமயத்தில் வந்தார் சூறாவளி முரளிதரன். தனது இரண்டாவது ஓவரின் முதல்பந்திலேயே ராபின் சிங்கை வீழ்த்தினார். சந்தனாவிடம் பிடி கொடுத்துவெளியேறினார் சிங். அவர் எடுத்த ரன்கள் 31, சந்தித்த பந்துகள் 48. இதில் 6பவுண்டரிகளும் அடங்கும்.

முதல் விக்கெட் விழுந்த பிறகு, பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லைமுரளி. தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டேயிருந்தார். முதலில்டெண்டுல்கர் விழுந்தார். தொடர்ந்து யுவராஜ் சிங், வினோத் காம்ப்ளி ஆகியோர்சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களில் இந்தியா திணறிக் கொண்டிருந்தது. மறுபுறம்உலக சாதனையைே நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தார் முரளிதரன். ஆனால்தமிழகத்தின் ஹேமங் பதானியும், விஜய் தாஹியாவும், முரளிக்கு சிறிதுநெருக்கடியைக் கொடுத்தனர்.

முதல் போட்டியில் விளையாடும் பதானி மிகவும் அழகாக ஆடினார். மூத்தவீரர்களிடம் இல்லாத பொறுப்பு இவரிடத்தில் இருந்தது. 55 பந்துகளைச் சந்தித்த அவர்42 ரன்களை எடுத்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். இதேபோல, விஜய்தாஹியாவும் பொறுப்புடன் விளையாடி 40 ரன்களைக் குவித்தார். இருவரும் சேர்ந்து96 பந்துகளில் 77 ரன்களைச் சேர்த்தனர்.

அவர்கள் இவ்வளவு பொறுப்புடன் விளையாடியும் கூட இந்தியாவின் வெற்றி மிகதூரத்திலேயே இருந்தது. இந்த நிலையில் பதானி அவுட் ஆனார். கூடவேநம்பிக்கையும் போனது.

இறுதியில், 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226ரன்களில் வீழ்ந்தது இந்தியா.

முரளிதரன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதியஉலக சாதனை படைத்தார். 10 ஓவர்கள் வீசிய முரளி, 30 ரன்களை மட்டுமே கொடுத்துஇந்த சாதனையை நிகழ்த்தினார். மேன் ஆப் தி மேட்ச் ஆகவும் முரளியேதேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்பு 1991-ல் பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத், இந்தியாவுக்கு எதிராக 7விக்கெட்டுகளை வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்து வந்தது. ஆனால் இதற்காகஅவர் 37 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். முரளி, 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததன் புதிய சாதனை படைத்தார். ஜாவேத் சாதனை நிகழ்த்தியதும்இந்தியாவுக்கு எதிரானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு ஹாட்ரிக்கும்அடங்கும்.

வாஸ் 2 விக்கெட்டுகளும், ஜெயசூர்யாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன. இருஅணிகளும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+