மூப்பனாராவது, 3-வது அணியாவது .. மறுக்கிறார் ஜனா.
சென்னை:
தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்று பா.ஜ.க. துணைத் தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் தொழில் வளம்குறைந்துள்ளது. புதிய தொழிற்சாலைகள் துவங்கும் சூழ்நிலை இல்லை. வேலை வாய்ப்பு அளிப்பதில் தோல்விகண்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்ஆட்சிக்கு அங்கே முற்றுப்புள்ளி வைக்கப்படுவது உறுதி. தோல்வி பயம் காரணமாகவே அம்மாநில முதல்வர்ஜோதிபாசு பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
கேரளாவில் தற்போது விஷச்சாராயம் பெருகியுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எதேச்சையாகநடந்தது என்று தள்ளி விட முடியாது. இதுகுறித்து முழுமையான விசாரணை அவசியம்.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் மோசடி செய்யப்படுவதாக தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் புகார்கள்எழுந்துள்ளன. இது அக்கட்சியின் அவல நிலையையே காட்டுகிறது.
தமிழகத்திலும், தேசிய அளவிலும் மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால்,அந்த முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பில்லை. குறிப்பாக தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணிஎந்த அடிப்படையில் அமையும்? அப்படி அமைந்தாலும் அது வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே அவர்காமராஜர் ஆட்சி என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு அதிமுகவுடன் நீடிப்பார்.
பாஜகவை வகுப்புவாத சக்தி என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதை எதிர்த்து நவம்பர் 1ம் தேதி முதல்டிசம்பர் 31ம் தேதி வரை நாடு முழுவதும் பேரியக்கம் நடத்தப்படும் என்றார் ஜனா.












Click it and Unblock the Notifications