கேரளாவில் மீண்டும் விஷச்சாராயம்: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரளாவில் விஷச்சாராயம் குடித்த இரண்டு பேர் இறந்தனர். மேலும் 59 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில்நடந்த இரண்டாவது சம்பவமாகும் இது.

திருவனந்தபுரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இப்பகுதியில் மத்தியபுறக்காவல் படைப் போலீஸார் முகாம் அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறந்தவர்களில் ஒருவர் போலீஸ்காரர் என்று தெரியவந்துள்ளது.

விஷச்சாராயம் குடித்த மேலும் 59 பேர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேரின்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லுவாத்துக்கல் மற்றும் கொட்டாரக்கரை பகுதிகளில் விஷச்சாராயம் குடித்த 32 பேர் இறந்தனர். 300 க்கும்மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.கே.அந்தோணி நேரில்சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் சட்டசபையில் கூறுகையில், மாநில அரசு விஷச்சாராயக் கும்பலின் பிடியில் உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாகரன் இதுகுறித்துக் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாட்டில் பெருகி வரும் விஷயசாராய கும்பலை அழிக்காமல்அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இருப்பினும், போலீஸ் டி.ஜி.பி.சிபி மாத்யூ தலைமையில் ஒரு குழு விஷச்சாராய சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தி வருகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+