சென்னையில் 5 சிறுவர்கள் கடலில் மூழ்கினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் கடலில்விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது கடலில் மூழ்கினர்.

தீபாவளியை ஒட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்,சென்னை பெரியார் நகர் டான்போஸ்கோ பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பவர்கள்கார்த்திக்கேயன், ராஜ்குமார், ரஞ்சித், ராஜேஷ், ஹேமாஸ்.

5 பேரும் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெள்ளிக் கிழமை மெரீனா கடற்கரைக்குசென்றனர். பிற்பகலில் இவர்கள் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பந்து கடலில் விழுந்தது. அந்த பந்தை எடுப்பதற்காக ஒருவர் பின்ஒருவராக கடலில் இறங்கினர்.

பந்தை யார் எடுப்பது என்பதில் போட்டி போட்டு கடலுக்குள் சென்றனர். அலையின்தாக்குதலை அறியாத மாணவர்கள் அதன் பின்னர் கரை திரும்பவே இல்லை.

விளையாடச் சென்ற பிள்ளைகள் இரவாகியும் வீடு திரும்பாமல் போகவேஅதிர்ச்சியடைந்த பெற்றோர் மெரீனாவுக்கு சென்று தேடினர். அங்கே இல்லைஎன்றதும் பயந்துபோய் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரித்தபோது மாணவர்கள் கடற்கரை ஓரமாக விளையாடியதுதெரியவந்தது. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

கடலில் மூழ்கிய மாணவர்களை மீட்க மீனவர்கள் மூலம் தேடுதல் பணியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+