மயிலந் தீபாவளி தெரியுமா?
கோவை:
கோவை அருகே வித்தியாசமான வகையில், ஒரு நாள் கழித்து கிராம மக்கள் "தீபாவளிபண்டிகை கொண்டாடினர்.
வழக்கமாக தீபாவளியை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று கொண்டாடுகிறோம்.இந்தியா முழுவதும் இதுதான் கொண்டாடப்படுகிறது. ஆனால், கோவை அருகேஉள்ள ஒரு கிராம மக்கள் இந்த தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராம மக்கள்தீபாவளியன்று அமைதியாக இருக்கின்றனர். பக்கத்து கிராமங்கள் எல்லாம்தீபாவளியை பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாட, இவர்கள் மட்டும்அமைதி காப்பது எல்லோருக்கும் வியப்பாக இருக்கும்.
ஆனால், அடுத்த நாள் தீபாவளியை இவர்களைப் போல் யாரும் கொண்டாடமுடியாது. மிகப் பெரும் திருவிழாவாகவே மாற்றி விடுகின்றனர். இப்படி அடுத்த நாள்தீபாவளியை கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைபிடித்து வருகின்றனர் இந்தகிராம மக்கள்.
இந்த கிராமத்தில் உள்ள ஒரு பழக்கம் தான் இத்தகைய மாற்றத்திற்கு ழுக் காரணமாகஅமைந்துள்ளது. இந்த காரணம் வித்தியாசமானது . அமாவாசையன்று இங்கு கறிசமைத்துச் சாப்பிடுவதில்லை. எனவே, ஐப்பசி மாதம் அமாவாசையன்று தீபாவளியைமக்கள் கொண்டாடுவதில்லை.
இந்த ஆண்டும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக27-ம் தேதி கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்துபலகாரம் சுட்டுச் சாப்பிடுவதோடு நின்று விடுவதில்லை. "ஆட்டுக் கிடா வெட்டு என்றஒரு மாபெரும் விருந்தை நடத்தி விடுகின்றனர்.
மற்றவர்களை விட வித்தியாசமாகக் கொண்டாடி வரும் இவர்கள், இந்த தீபாவளியை"மயிலந் தீபாவளி என்றழைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications