லேடனைத் தாக்க அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் .. கூறுகிறது பாக்.
கராச்சி:
ஆப்கானிஸ்தானில் மறைந்துள்ள சர்வதேச பயங்கரவாதி ஓசாமா பின் லேடனைத்தாக்க பாகிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தினால் அதை அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார்கூறியுள்ளார்.
கராச்சியில் அவர் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில்உள்ள தலிபான் முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தியது.அப்போது பாகிஸ்தானிடமிருந்து, எங்கள் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ளஅமெரிக்கா அனுமதி கோரவில்லை.
இந்த முறை பின் லேடனைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தஅமெரிக்கா நினைத்தால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி அமெரிக்காதாக்குதல் நடத்தினால், சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவிப்போம்.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுமதிக்காது. ஆப்கான் மீதுதாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறதா என்பது குறித்து எங்களுக்குத்தெரியாது. இருப்பினும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க பத்திரிகைகளில்செய்திகள் வருகின்றன என்றார் அவர்.
தலிபான்களின் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தான் மற்றும் மூன்றுமுஸ்லீம் நாடுகள் மட்டுமே அங்கீகாரம் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச பயங்கரவாதியான செளதி அரேபியாவைச் சேர்ந்த ஒசாமா பின் லேடன்,ஆப்கானிஸ்தானில்தான் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது.
1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு நாடுகளின் அமெரிக்க தூதரகங்களில்நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இதற்கு பின் லேடன்தான்காரணம் என அமெரிக்கா கூறியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தியது.
தற்போது ஏமன் தலைநகர் ஏடன் நகரில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கப்பலில் குண்டுவெடித்தது. இதில் 17 அமெரிக்க வீரர்கள் இறந்தனர். இதற்கும் பின்லேடனே காரணம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதுதொடர்பான உறுதியானதகவல் தெரிய வந்தால் ஆப்கன் மீது ஏவுகனைத் தாக்குதல் நடத்த அமெரிக்காதிட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications