3-வது அணி தவிர்க்க முடியாதது.. எம்.பி.சுப்ரமணியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டித்தலைவர் எம்.பி.சுப்ரமணி யம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அவர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது, கலர் டிவி, டான்சி நிலப்பேரம், பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் விவகாரம் போன்ற பல ஊழல்கள் புரிந்ததாக அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா மேல் வழக்குத் தொடரப்பட்டது.

இதனால், பொதுமக்கள் ஜெயலலிதா மேல் அதிருப்தியுடனேயே உள்ளனர். இதனால் தமிழகத்தில் அதிமுகமீண்டும் தலையெடுக்குமா எனபது சந்தேகமே.

தற்போது டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளார்ஜெயலலிதா. அவர் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியை மலரச் செய்வேன் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அக்டோபர் 24 ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியைக்கொண்டு வருவது என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அவர் எப்படி எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வரமுடியும்? மேலும் தமிழ் மாநில காஙகிரசும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று அறிக்கைவெளியிட்டு வருகிறது. இதெல்லாம் சாத்தியமில்லாதது.

மேலும் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக வும் ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது என்று கூறி விட முடியாது.தமிழகத்தில் இனிமேல் மூன்றாவது அணி உருவாவதுதான் சிறந்தது என்றார் சுப்ரமணியம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+