பட்டாசுத் தகராறில் ஒரு கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீபாவளி பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.

சென்னையை அடுத்த சாத்தாங்காடு அம்பேத்கார் நகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ரத்னவேலு. வயது 46. இவர்தீபாவளிக்கு முதல் நாள் இரவு குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டு முன்பு பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தார்.

பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை அவர் கொளுத்தியதால், எதிர் வீட்டில் வசிக்கும் ரமேஷின் (30)குழந்தைகள் பயந்தனர். இதனால் ரமேஷ் நேராக ரத்னவேலுவிடம் சென்று, என் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்சத்தத்தை கேட்டு பயப்படுகின்றன. இரவில் வெடிக்க வேண்டாம். காலையில் வெடியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் ரத்னவேலுவோ நான் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்? எப்போதுவேண்டுமானாலும் வெடிப்பேன் என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ரமேஷை,ரத்தினவேலு அடித்து விட்டார்.

அக்கம்பக்கத்தவர் தடுத்து ரமேஷை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆத்திரமடைந்த ரமேஷ் இரவுமுழுவதும் தூங்காமல் இருந்தார். விடிந்ததும் தீபாவளி என்று கூட பார்க்காமல் ஒரு பெரிய உருட்டுக் கட்டையைஎடுத்துக் கொண்டு நேராக ரத்தினவேலு வீட்டுக் கதவை தட்டினார்.

"டேய் ரத்தினவேலு, வெளியே வாடா என்று கத்தினார். சத்தம் கேட்டு வெளியே வந்த ரத்தினவேலுவை, கையில்வைத்திருந்த உருட்டுக் கட்டையால் தலையில் ஓங்கி அடித்தார் ரமேஷ். இதில், தலை சிதறி அதே இடத்தில்ரத்னவேலு இறந்தார். கொலையாளி ரமேஷ் தலைமறைவாகி விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+