பாகிஸ்தான் உருவானதே தவறு.. கூறுகிறார் பாக். தலைவர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்தியாவிலிருந்து, பாகிஸ்தானைப் பிரித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றுமுட்டாஹிதா குவாமி இயக்கத் தலைவர் அல்டாப் உசேன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் என்ற ஒரு நாடே தேவையில்லாதது என்ற கருத்தில் அவர் கூறியுள்ளது,பாகிஸ்தானில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அல்டாப் உசேன் லண்டனில்தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தற்போது பாகிஸ்தான் தனி நாடாக மாறியதே அபத்தம் என்று உசேன் கருத்துதெரிவித்துள்ளார். செப்டம்பர் 17-ம் தேதி லண்டன் ஆக்டன் டவுன் ஹால் அரங்கில்நடந்த நிகழ்ச்சியில் அல்டாப் உசேன் பேசியதாவது:

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை. மனித குலவரலாற்றிலேயே மிகப் பெரிய தவறு இது.

"நஸாரியா - இ - பாகிஸ்தான் (பாகிஸ்தான்) என்ற கொள்கையே தவறு. 1973-ம்ஆண்டு இயற்றப்பட்ட பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் இதற்கு ஏதாவது பொருள்கூறப்பட்டுள்ளதா?.

பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னா இந்த வார்த்தையைஎங்காவது, என்றாவது பயன்படுத்தியிருக்கிறாரா? பாகிஸ்தான் கோரி போராட்டம்நடத்தியபோதிலும் சரி, அதற்குப் பிறகும் சரி ஜின்னா இந்த வார்த்தையைப்பயன்படுத்தியதில்லை.

பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் நஸாரியா - இ -பாகிஸ்தான் என்ற கொள்கயேஎங்கும் கூறப்படவில்லை. உண்மையில் பாகிஸ்தானை நடத்திக் கொண்டிருப்பது ஒருபஞ்சாபிக் குடும்பம்தான். பாகிஸ்தானே ஒரு பஞ்சாபி காலனியாகத்தான் தெரிகிறது.

இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அல்லது பாகிஸ்தான்சட்டத்தின் அடிப்படையில் இங்கு ஏதாவது நடக்கிறதா? இந்த சட்டங்களை யாராவதுமதிக்கிறார்களா?

பாகிஸ்தான் என்ற கொள்கைக்கு யாராவது விளக்கம் அளித்தால் நல்லது என்றார்உசேன்.

உசேனின் பேச்சு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது, இந்தியாவில் வசித்த பலமுஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களைக் கொண்டகட்சிதான் முட்டாஹிதா குவாமி இயக்கம்.

பாகிஸ்தான் உருவாக இவர்களே முக்கியக் காரணம். இந்திய முஸ்லீம்களைக் கொண்டஇந்தக் கட்சியின் தலைவர் பாகிஸ்தானை உருவாக்கியதே தவறு என்று கூறியிருப்பதுபாகிஸ்தானின் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசேனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முஸ்லீம் அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+