இனாம் தொல்லை.. டெலிபோன் பூத் உரிமையாளர் சாவு
ஓசூர்:
தீபாவளி மாமூல் கேட்டு துன்புறுத்தியதில் டெலிபோன் பூத் உரிமையாளர் இறந்துபோனர். இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஊழியர்கள் 3 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
ஒசூர் அருகே உள்ள தேன்கனிக் கோட்டையைச் சேர்ந்தவர் இர்ஷத் அலி (29). இவர்கொளமங்கலம் என்ற ஊரில் எஸ்.டி.டி. பூத் வைத்து நடத்தி வந்தார்.
தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்பு இவரிடம், டெலிபோன் துறையில்மெக்கானிக்காக இருக்கும் ராமகிருஷ்ணன் (38), தீபாவளிக்கு 300 ரூபாய் இனம்கேட்டுள்ளார். ஆனால் இர்ஷத் அலி ரூ. 150 ரூபாய் தான் கொடுப்பேன் எனக்கூறிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், வாட்ச்மேன் கங்காதரன் மற்றும் ஒருஊழியர் சிவக்குமார் ஆகியோரை அழைத்து வந்து இர்ஷத் அலியைத் தாக்கியுள்ளார்.இந்தத் தாக்குதலில் இர்ஷத் அலி காயமடைந்தார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தேன்கனிக் கோட்டைப் போலீசார், சம்பவ இடத்திற்குவந்தனர். நான்கு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவுசெய்தனர்.
அழைத்துச் செல்லும் வழியில் இர்ஷத் அலி மயக்கமடைந்து இறந்து போனார்.இதனையடுத்து போலீசார் உட்பட டெலிபோன் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.போலீசார் அந்த இடத்திலேயே டெலிபோன் ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து போனதால், போலீசார்உட்பட அனைவர் மீதும் ஆர்.டி. ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications