நாகரீக வரம்புகளை மீறி விட்டார் ஜெ ...ஆர்.எம்.வீரப்பன்
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு ஆயுள் சிறை என்று சொல்லி நாகரீகத்தின் வரம்புகளைஎல்லாம் மீறியுள்ள ஜெயலலிதாவின் ஆணவத்தை தமிழ் சமுமதாயம் பொறுத்துக்கொள்ளாது என்று எம்ஜிஆர் கழகம் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா வாய்க் கொழுப்போடு தமிழ் சமுதாயத்தின் மீதுவசை பாடி வக்கணை காட்டி, விஷம் கக்கியுள்ளார்.
தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்த எந்த தமிழரும் வெட்கப்படுகிற வகையில், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்களால் நேசிக்கப்படுகிற முதல்வர் கருணாநதிமீது அவச்சொற்களை அள்ளி வீசியுள்ளார்.
கருணாநிதியை ஆயுள் முடியும் வரை சிறையிலடைப்பேன் என்று பேசியுள்ளார்.ஜெயலலிதாவின் ஆணவப் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் நாகரீக உணர்வுள்ள,தன்மானம் மிக்க அரசியல்வாதிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகரீகத்தின் வரம்புகளை எல்லாம் மீறியிருக்கிறார் ஜெயலலிதா. எதையும் செய்வதற்குதுணிகிற ஜெயலலிதா கூட்டம் ஏதோ அரசியல் சதித் திட்டத்தில் இறங்கியிருக்கிறதுஎன்று எண்ணத் தோன்றுகிறது. சதிச் செயலின் வெளிப்பாடாகத் தான் ஆயுள் இருக்கும்வரை சிறையில் அடைப்பேன் என கூறுகிறார் என்று ஆர்.எம்.வீ. கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications