40 தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழ் தேசியக் கட்சி
ஈரோடு:
சட்டசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சி 40-க்கும் மேற்பட்ட இடங்களில்போட்டியிடும் என கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் தமிழ் தேசியக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குகட்சியின் பொதுச் செயலர் ஆடிட்டர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைமைச் செயலர் துரை தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய ஒருஉயர் மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதி ஒதுக்கீடு மற்றும் கூட்டணி பற்றிஇந்த அமைப்பு பரிசீலனை செய்யும்.
அடுத்து வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியின் கொள்கைக்கு ஒத்து வரும்கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளப்படும்.
வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், 40 இடங்களுக்கும் மேல் போட்டியிடவேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மக்களின் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தவும் கட்சி முடிவு செய்துள்ளது.சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றிவிவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.
விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை எடுத்துச் செல்லவும், டீசல் பம்புகளைஇயக்கவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, டீசல் விலை உயர்வை மறு பசீலனைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது எனதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications