வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டம்
சென்னை:
வரி செலுத்துவோர் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த மத்திய நேரடி வரிகள் வாரியம்இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னை வர்த்தக மற்றும் தொழிற்சபையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்வாரியத்தின் தலைவர் ஏ. பாலசுப்பிரமணியம் பேசியதாவது:
நடப்பு ஆண்டில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி நாட்டில் மொத்தம் வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாகும். இது கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில்இருந்ததைவிட இரு மடங்கு அதிகமாகும்.
வரி செலுத்துவோர்களின் விரைவில் 5 கோடியாக உயர்த்த வாரியம் நடவடிக்கைமேற்கொண்டுள்ளது. இந்த இலக்கை வாரியம் நிச்சயம் எட்டும் என்று நம்புகிறேன்.
வரி செலுத்துவோர்களுக்குச் சிறப்பான சேவையை வாரியம் அளித்து வருகிறது. வருமானவரித்துறையை மாற்றியமைக்கவும், வாடிக்கையாளர்களுக்கான சேவையைமேம்படுத்துவது தொடர்பாகவும் சில யோசனைகளை வாரியம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்தவிதமான வரிச் சலுகைகளையும் வாரியத்திடமிருந்துகேட்கக் கூடாது என்று நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகச் சபைகளும் சபதம்ஏற்கவேண்டும்.
அப்படி எடுத்துக் கொண்டால், மக்களின் வரிச் சுமையை கணிசமான அளவுக்குக் குறைக்கவாரியம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார் பாலசுப்பிரமணியன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications