புதுவை தீவிபத்து நஷ்டம் ரூ. 20 லட்சம்
புதுவை:
புதுவை வில்லியனூர் அருகே அருமந்தபுரம் திடீர் நகரில் சனிக்கிழமை ஏற்பட்டதீவிபத்தில் ஏற்பட்ட மொத்தம் நஷ்டம் ரூ. 20 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை துணை ஆட்சியர் மலர்கண்ணன் கூறியதாவது:
அருமந்தபுரம் திடீர் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 360 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.இவ் விபத்தில் உயிர்ச் சேதம் இல்லை. ஆனால், 3 பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
மற்றபடி இவ் விபத்தில் பொருட்சேதம் அதிகம். மொத்தம் ரூ. 20 லட்சம் அளவுக்குஇழப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் விரைவாகமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக் கட்டடத்தில்தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
வருவாய்த் துறை மூலம் அவர்களுக்குப் பிற உதவிகள் வழங்கப்படும். டெல்லிசென்றுள்ள முதல்வர் பி. சண்முகம், புதுவை திரும்பிய பிறகுதான்பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதுமுடிவு செய்யப்படும்.
இவ் விபத்துக்கு சதி காரணமாக இருக்க முடியாது. அணைக்காமல் விடப்பட்டஅடுப்பிலிருந்து நெருப்புப் பொறி பறந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்மலர்கண்ணன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications