சென்னையில் மறியல்: வி.பி.சிங், தேவ கவுடா பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில்சென்னையில் நவம்பர் 28-ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதற்கு முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், தேவ கவுடா ஆகியோர் தலைமைதாங்குகின்றனர்.
சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வு, மக்கள் விரோதகொள்கைகள் ஆகியவற்றைக் கண்டித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளைஎதிர்த்தும் இம் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை துறைமுகம் எதிரே நடைபெறும் இம் மறியல் போராட்டத்தில் முன்னாள்பிரதமர்கள் உள்பட தேசிய மற்றும் மாநில மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள்கலந்து கொள்கின்றனர் என்று தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications