காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்தீவிரவாதிகளுக்கு எதிரான அம் மாநில போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும்இணைந்து சிறப்பு அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சனிக்கிழமை முதல் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந் நிலையில், சனிக்கிழமை இரவு சஃபோபோரா மற்றும் சேவா ஆகியஇடங்களில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும்சண்டை நடந்தது.
இதில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில்இரண்டு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள்மறைந்திருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி பொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications