காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 6 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இதில் 4 பேர் சிறுவர்கள்.
ஜம்மு மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சாப்பா மோர் என்ற கிராமத்தில்ஞாயிற்றுக்கிழமை காலை இச் சம்பவம் நடந்தது.
நவீன ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேரை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் மத்திய பிரதேசத்திலிருந்து குடிபெயர்ந்துவந்தவர்கள். குடும்பத்தினர் அனைவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர். படுகொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகளைப்பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications