கைதிகளுக்கு எதிராக சிறை வார்டன்கள் உண்ணாவிரதம்
சென்னை:
கைதிகளுக்கு எதிராக சென்னை மத்திய சிறை வார்டன்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.பின்னர் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இது பற்றி கூறப்படுவதாவது:
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அறுப்புக் குமார். பிளேடால் மற்றவர்களைக்கீறி காயப்படுத்தியதால் இவருக்கு அப் பெயர் வந்தது.
கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறைக் கைதிகளை வார்டன் துரைராஜ் சிங்கணக்கெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அறுப்புக் குமார் தான் மறைத்துவைத்திருந்த பிளேடால் துரைராஜ் சிங் முகத்தில் கீறினார்.
இதனால் வார்டன் முகத்தில் ரத்தம் வழிந்தது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர்ராமச்சந்திரனிடம் அவர் புகார் கொடுத்தார். காயமடைந்த துரைராஜ் சிங்குக்குமுதலுதவி அளிக்கப்பட்டது.
ஆனால், அவரது புகாரின்பேரில் ராமச்சந்திரன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது.
இதனால் சிறை வார்டன்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர். பிளேடால் கீறியஅறுப்புக் குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இதையடுத்து வார்டன்களிடம் சிறைத்துறை உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அறுப்புக் குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து வார்டன்கள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டு பணிக்குத்திரும்பினர்.












Click it and Unblock the Notifications