வட இலங்கையில் புலிகள் - ராணுவம் இடையே கடும் சண்டை
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளிடம் இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றும்நோக்கில் புலிகள் மீது இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை ஞாயிற்றுக்கிழமைதொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டைநடந்து வருகிறது.
இலங்கை ராணுவம் தற்போது சாவகச்சேரியின் மேற்குப் பகுதியில் முன்னேறிவருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னே தெரிவித்தார்.
சாவகச்சேரியைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு வரை முற்றுகையிடும்வகையில் ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். 4 கிலோமீட்டர் தூரம்வரை முன்னேறி தங்களது நிலையை பலப்படுத்திக் கொண்ட பிறகு புலிகள் மீதுகடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றார் அவர்.
இத் தாக்குதல் குறித்த வேறு தகவல்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால்,ராணுவத்தின் இப் புதிய தாக்குதல் குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும்இல்லை.
யாழ்ப்பாண தீபகற்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு அடுத்து இரண்டாவது பெரியநகரமாகும். கடந்த ஆண்டு நடந்த கடும் சண்டைக்குப் பிறகு இந் நகரைராணுவத்திடமிருந்து புலிகள் கைப்பற்றினர்.
தற்போது யாழ்ப்பாணத்துக்கும் சாவகச்சேரிக்கும் இடையே உள்ள 15 கிலோமீட்டர்நீள முக்கிய சாலையை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னாள் விடுதலைப் புலிகள் கொலை - விசாரிக்க தனி குழுக்கள்:
மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் 26 பேர்சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 சிறப்பு விசாரணைக் குழுக்களைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா நியமித்துள்ளார்.
மத்திய இலங்கையில் உள்ள இந்த மறுவாழ்வு முகாமில் முன்னாள் கைதிகள்,விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என பலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், கடந்த வாரம் இம் முகாமுக்குள் புகுந்த ஒரு கும்பல் முன்னாள்விடுதலைப் புலிகள் 26 பேரை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
முன்கூட்டியே திட்டமிட்டு இப் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்துஇன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில், இப் படுகொலை பற்றி விசாரிக்க 3 தனி விசாரணைக் குழுக்களைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா நியமித்துள்ளார்.
பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு கடுமையானதண்டனை வழங்கவேண்டும் என்று இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபையின்பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்தே சிறப்பு விசாரணைக் குழுக்களை அதிபர் சந்திரிகா குமாரதுங்காநியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications