பஸ்ஸில் பெண்ணிடம் திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு
ஈரோடு:
பஸ்சில் உடன் பயணம் செய்த பெண்ணிடம் நூதன முறையில் நகையைகொள்ளையடித்த பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் லதா (25). இவர் தனது சொந்த ஊரானஈரோட்டிற்குச் சென்று விட்டு குழந்தையுடன் பஸ்ஸில் கோவை வந்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண், லதாவிடம் பேச்சுக் கொடுத்தவறே வந்தார்.சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தையை வைத்துக் கொண்டு சிரமப்படாதீர்கள், பையைஎன்னிடம் கொடுங்கள் எனக் கூறி வாங்கிக் கொண்டார்.
கவுண்டம்பாளையம் வங்கியில் பணிபுரிவதாகவும், எந்த உதவி தேவைப்பட்டாலும்வந்து கேளுங்கள் செய்து தருகிறேன் எனவும் அப்பெண் கூறியுள்ளார்.
கோவை வந்த பிறகு தான் வைத்திருந்த பையை மீண்டும் லதாவிடம் கொடுத்துவிட்டுஅப் பெண் சென்றுவிட்டார். பையை வாங்கிக் கொண்ட லதா, கணவருக்கு போன்செய்வதற்காக பையில் வைத்திருந்த பணப் பையைத் தேடினார்.
ஆனால் அப் பையைக் காணவில்லை. அதில் 6 பவுன் தங்க நகை, ரூ. 4 ஆயிரம்ரொக்கம் இருந்தது.
தன்னிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண் குறித்து லதா போலீசில் புகார்செய்தார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
