அரசு மருத்துவமனைகள் மேம்படுத்த உலக வங்கி உதவி
கோவை:
அரசு மருத்துவமனைகளை சுகாதரம் மற்றும் நவீன மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தஉலக வங்கியிடம் நிதியுதவி கோரப்படும் என மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர் ராஜா தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்று வரும் மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி மற்றும் கருத்தரங்கில்அவர் பேசியதாவது:
இந்திய அளவில் மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்களை நாம் பெற்றுள்ளோம்.ஆனால் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு மருத்துவ வசதிகள் இன்னும்ஏற்படவில்லை.
இந்த வசதிகளை மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் மேம்படுத்த தேவையானநடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ. 650 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிஅளிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மருத்துவத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பிகார் போன்ற மாநிலங்களில் இந்த நிதி உதவிமிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, இந்த நிதியுதவியை உலகவங்கியிடமிருந்து பெற அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தவும் டாக்டர்கள் முன்வரவேண்டும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் ஒரு பாடமாகச்சேர்க்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றிமருத்துவக் கல்லூரிகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றார் ராஜா.
விழாவில் தமிழக சுகாதார அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல இன்னும் போதுமானவசதிகள் இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள 1,400 ஆரம்ப சுகாதார நிலையங்களில்,650 சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் இல்லை.
மக்கள் நலவாழ்வுத் திட்டங்களை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்திலட்சக்கணக்கானவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 354 கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களுக்குஇலவசமாக மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 200 அரசு மருத்துவமனைகளில் அல்ட்ரா சோனிக் நவீன மருத்துவக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பல மருத்துவமனைகளில் நிவீன மருத்துவக்கருவிகளை நிறுவ ஜப்பான் ரூ. 21. 40 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 300 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாகச் செயல்படும் டாக்டர்கள்பற்றி தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்வீராசாமி.












Click it and Unblock the Notifications