டான்சி: தீர்ப்பை எதிர்த்து ஆசிப் மேல்முறையீடு
சென்னை:
டான்சி வழக்கில் தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் முகம்மது ஆசிப் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் ஆசிப், ஜெயலலிதா, சசிகலா உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது. ஆசிப்புக்கு மட்டும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலர் ஏற்கெனவே சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், முகம்மதுஆசிப் திங்கள்கிழமை மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
டான்சி வழக்கில் தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துசெய்யவேண்டும் என்றும், மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் வரைசிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் அந்த மேல்முறையீட்டு மனுவில் ஆசிப் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications