அய்யனார் சிலைகள் சேதம்..2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் உள்ள மிகப் பழமையான அய்யனார் கோவிலில் இரு சிலைகளை சேதப்படுத்தியது தொடர்பாக இரண்டு பேர்கைது செய்யப்பட்டனர்.
வல்லம் கிராமத்தின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் அய்யனார் கோவிலில் உள்ள மதுரை வீரன் மற்றும் பொற்கிளி ஆகிய இரண்டுசிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் சேதப் படுத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்தக் கோவில் 100 ஆண்டுபழமையானது.
வெள்ளிக்கிழமை கோவில் பூஜாரி, பூஜை செய்வதற்காக கோவிலுக்குள் சென்ற போது சிலைகள் சேதப்பட்டிருப்பது தெரிய வந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications