என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
பெங்களூர்:
ஷார்ஜா கிரிக்கெட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. சாம்பியன் பட்டம்வென்ற இலங்கை, இந்திய அணியை அனைத்து விதத்திலும் பந்தாடியது என்றால் அதுமிகையில்லை.
என்ன ஆயிற்று இந்திய அணிக்கு?. 314 என்ற கடினமான இலக்கையும் எட்டி சாதனைபடைத்த இந்திய அணி 299 ரன்கள் எடுக்க முடியாமல் வெறும் 54 ரன்களுக்குஆட்டமிழந்தது என்றால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடிவில்லை.
இலங்கை அணியினரின் ஒட்டுமொத்த சிறப்பான ஆட்டமே அந்த அணிக்கு வெற்றிதேடித்தந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், இந்தியஅணியினர் அப்படி ஆடினார்களா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.
இந்திய அணி இன்னும் தனிநபர் ஆட்டத்தைத்தான் நம்பியுள்ளது என்பதை ஷார்ஜாபோட்டி நிரூபித்து விட்டது. டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 26 சதங்களைஅடித்துள்ளார். அதில் 21 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இதைப் பார்க்கும்போது ஒரு தனி நபரின் ஆட்டம்தான் இந்தியாவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தருகிறது என்பது ஓரளவு புரிந்தாலும், எத்தனை காலத்துக்கு அதுசாத்தியமாகும். டெண்டுல்கர் மட்டுமே எத்தனை நாளைக்கு அணிக்கு வெற்றியைத்தேடித் தருவார்.?
கிரிக்கெட் என்பது 11 வீரர்களின் ஒற்றுமையான, ஒருங்கிணைந்த, முழுமையானஆட்டத்தை மையமாகக் கொண்டது. ஒரு சில ஆட்டங்களின் வெற்றி ஒரு தனிமனிதரின் சிறப்பான ஆட்டத்தைப் பொறுத்ததுதான் என்றாலும், எல்லா ஆட்டத்திலும்அதை எதிர்பார்க்கமுடியாது என்பதுதான் முழுமையான உண்மை.
இந்திய அணியிடம் என்ன தவறு இருக்கிறது. தனது முந்தைய வெற்றிகள், தோல்விகள்ஆகியவற்றிலிருந்து இந்தியா இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்அனைவரின் குற்றச்சாட்டும்.
கிரிக்கெட் என்பது 11 பேருடைய ஒட்டுமொத்த ஆட்டம். தனி மனித ஆட்டம் இல்லைஎன்பதை இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு கடைசியாகக் கிடைத்தவிலை ஷார்ஜாவில் 245 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வி.
கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும், கடைசி நிலையில் உள்ள கென்யா,பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்பட அனைத்தும் அணியின் வெற்றி, தோல்வியைநிர்ணயிப்பது எது, எப்படி விளையாடினால் வெற்றி பெறலாம் என்ற பலவகைகளில்தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தெரிந்து கொள்ளும் முயற்சியில்ஈடுபட்டிருக்கும்போது இந்தியா மட்டும் ஏன் இப்படி...?
ஷார்ஜா போட்டியில் இந்தியா விளையாடிய ஆட்டத்தைப் பார்த்தபோது, போட்டியில்கலந்து கொள்ள வந்தது போல் இருந்ததே தவிர, வெற்றி பெறவேண்டும் என்றுநினைத்ததாகவே தெரியவில்லை. உலகின் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர்என இந்திய அணியில் வீரர்கள் இருந்தும், இந்தியா தோற்றதற்குக் காரணம்...?
இனிமேலாவது ஷார்ஜா போட்டியில் கிடைத்த மிகப்பெரிய அவமானத்தை உணர்ந்துஇந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சீர்திருத்துமாஎன்பதுதான் இப்போது எழும் கேள்வி.
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல், பலமுறை படுதோல்விக்குப்பிறகு இந்தியா வீறு கொண்டு எழுந்துள்ளது. ஆனால், அதுதொடர்கதையாகவிடக்கூடாது. ஆட்டத்தில் அணியின் முழுமையான ஈடுபாட்டுக்குஎன்ன செய்யவேண்டும் என்பதை கிரிக்கெட் வாரியம் உணர்ந்து செயல்படவேண்டும்.
100 கோடி மக்களில் தகுதியான, திறமையான 11 கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட்வாரியத்தால் தேர்வு செய்யமுடியாதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தத்தேர்வும் முறையாக நடைபெறுகிறதா என்பது மற்றொரு கேள்வி.
தென் ஆப்பிரிக்க அணியை உலகின் சிறந்த அணியாகக் கொண்டு வர அந்த அணியின்முன்னாள் பயிற்சியாளர் பாப் ஊல்மெர் என்ன முயற்சிகளை மேற்கொண்டார்.தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக உள்ள டாவ் வாட்மோர் உள்படஅனைத்து அணிகளின் பயிற்சியாளர்களும் என்ன முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்திய அணியின் பயிற்சியாளரால் மட்டும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்குஅழைத்துச் செல்ல ஏன் முடியவில்லை. அவருக்கு என்ன தேவைப்படுகிறது. அவர்சுதந்திரமாகச் செயல்படுகிறாரா என்பது எல்லோர் மனதிலும் எழும் அவசியமானகேள்வி.
இப்படி பல கேள்விகளை எழுப்பும் எதிர்கால சந்ததியினருக்கு தங்கள; வெற்றியின்மூலம் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணியும்,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் உள்ளன.
இந்திய அணிக்குப் புதிய வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஸாகீர்கான், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிர டெண்டுல்கர், கங்குலி, திராவிட், கும்ளே என உலகத் தரம் வாய்ந்தவீரர்கள் இருக்கின்றனர். இனிமேல் அனைத்து வீரர்களும் தங்களது நிறை, குறைகளைஆராய்ந்து விளையாடத் தொடங்கினால் இந்தியாவின் வெற்றியை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.
ஷார்ஜாவில் இலங்கை அணியின் வெற்றியை அந்த அணியின் ஒருங்கிணைந்தசெயல்பாடு, ஆட்ட முறை ஆகியவைதான் நிர்ணயித்தன என்று டிவிவர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஒரு முனையில் இந்திய விக்கெட்டுகள் வீழ்ந்தபடிஇருந்தபோதிலும், இலங்கை அணியினரின் டீம் ஒர்க் தான் அவர்களுக்கு வெற்றியைத்தேடித் தந்தது என்று அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.
ஆனால் ஒருங்கிணைந்த ஆட்டம், ஆட்ட நெறிமுறை இரண்டிலும் இலங்கையிடம்இந்தியர்கள் தோற்றனர். கோப்பையையும் கோட்டைவிட்டனர்.
ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், ஆட்டம் நடைபெறும் அன்று எந்த அணிகிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்குகிறதோ அதுதான் அன்றையதினம் வெற்றி பெறும் என்பது நீண்டகாலமாக உணரப்பட்டு வரும் உண்மை.
ஷார்ஜா போட்டியிலும் அதுதான் நடந்தது. இலங்கை அணியை விட உலகத் தரம்வாய்ந்த சிறந்த ஆட்டக்காரர்கள் பலர் இருந்தும் இந்திய அணி தோற்றதும், இலங்கைஅணி வெற்றி பெற்றதும் இதற்குச் சான்று.
இந்திய அணிக்கு இப்போதைய தேவை எல்லாம் சிறந்த நிர்வாகம், சிறந்த வீரர்கள்,சிறந்த அதிகாரிகள், சிறந்த பயிற்சியாளர்தான். இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் உணர்ந்து செயல்படவேண்டும்.
அப்படி உணர்ந்து செயல்பட்டு சிறந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்கும்பட்சத்தில் ஷார்ஜாவில் கிடைத்ததைப் போன்ற ஒரு மோசமான தோல்வி இந்தியாவுக்குஇனியும் கிடைக்காது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உணருமா...?












Click it and Unblock the Notifications