கோவையில் 2 விபத்துக்களில் 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருமணத்திற்காக உறவினர்களை அழைக்கச் சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேர் கோவை அவிநாசி அருகே நடந்த விபத்தில் இறந்தனர். இவ்விபத்துஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்தது.

கோவையிலிருந்து சேலம் நோக்கி ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டில் இருந்து ஒரு மாருதி வேன் எதிேரே வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்சும் வேனும், அவிநாசி அருகேயுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். ஒருவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

திருமணத்திற்கு உறவினர்களை அழைப்பதற்காக இவர்கள் பஸ்சில் ஈரோட்டிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நடந்தது.

காயமடைந்த 2 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தோரின் விபரம் குறித்து அறிய போலீசார்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி 4 பேர் சாவு:

இதேபோல, தாராபுரம் அருகே பஸ்சுக்குக் காத்திருந்த கூட்டத்தில் லாரி புகுந்ததில் நான்கு பேர் இறந்தனர்.

உடுமலைப் பேட்டை குறிஞ்சிக் கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70), இவரது மனைவி சுப்பம்மாள் (60). வீராச்சி மங்கலத்தைச் சேர்ந்தவர்கள்சாமுவேல் (14), இவரது சகோதரி சுமதி (15) இவர்கள் உள்பட பயணிகள் தாராபுரம் அருகே உள்ள தெக்கலூர் பிரிவு என்ற இடத்தில் பஸ்சுக்காகக்காத்திருந்தனர்.

அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்திச் செல்ல ஒரு லாரி முயன்றது. இந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீதுமோதியது. இதில் பயணம் செய்த நாச்சிமுத்து (55), வீரம்மாள் (50), ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர், தறி கெட்டு ஓடிய லாரி அருகில், பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த நான்கு பேர் மீதும் மோதியது. இதில் ஆறுமுகம், சுப்பம்மாள் ஆகியோர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். சாமுவேல், மற்றும் அவரது சகோதரி சுமதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் கிளீனரைக் கைது செய்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+