மேட்ச் பிக்ஸிங்: அறிக்கை சமர்ப்பித்தது சி.பி.ஐ.
டெல்லி:
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைநடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் திங்கள்கிழமைசமர்ப்பிக்கப்பட்டது.
சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ஆர்.என். சவானி தலைமையிலான சிபிஐ குழு, மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தீன்ஷாவைச் சந்தித்து, விசாரணைஅறிக்கையைச் சமர்ப்பித்தது.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும்கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலாக இத்தகைய மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டைக் கூறியதுமனோஜ் பிரபாகர் கூறினார்.
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சி குரோனியே பிடிபட்டார். அவரிடம் நடத்தியவிசாரணையில் இந்திய வீரர்கள் பலர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறினார்.
இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது. கடந்த 6 மாத காலமாக சிபிஐ விசாரணை நடத்தியது. மே 2-ம் தேதிமுதல் பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மேட்ச் பிக்ஸிங் பற்றி சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ஆர்.என். சவானி தலைமையில் நடந்த இந்தவிசாரணையின் முதல்கட்ட அறிக்கையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரிடம்சிபிஐ திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தீன்ஷா, நவம்பர் 20-ம் தேதிநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போதுநாடாளுமன்றத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
சுமார் 150 பக்கங்கள் கொண்ட இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 3 முறைதள்ளிப் போடப்பட்டது. இறுதியில் அனைத்தும் முடிந்தபிறகு திங்கள்கிழமை அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் அறிக்கையில் என்னகூறப்பட்டிருக்கிறது என்பது வெளியே தெரியவரும். ஏற்கெனவே சிபிஐ அறிக்கையில்5 கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளதாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
ஆனால், அதை சிபிஐ அதிகாரிகள் மறுத்தனர். மத்திய அமைச்சர் தீன்ஷாவும் மறுத்தார்.பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் முழுவதும் உண்மையல்ல. ஆதாரமற்றவைஎன்று அவர்கள் தெரிவித்தனர்.
சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அந்த வீரர்கள் கிரிக்கெட்விளையாட ஆயுட்காலத் தடை விதிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியமும் அறிவித்துள்ளது.
சிபிஐ அறிக்கையில் அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா,நயான் மோங்கியா, பிசியோதெரபிஸ்ட் அலி இராணி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்யமறுத்துவிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications