இந்தியாவால் 200 கிலோ டன் அணுகுண்டு தயாரிக்க முடியும்
மும்பை:
200 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் வலிமை தற்போது இந்தியாவிடம் உள்ளது என்று மத்திய அணு சக்திக் கமிஷன் தலைவர்டாக்டர் ஆர்.சிதம்பரம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை நடந்த ஹோமி பாபாவின் 91 வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு அவர்பேசியதாவது:
இந்தியா 1998 ம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 ம் தேதிகளில் ராஜஸ்தானில் பொக்ரானில் 5 முறை அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தியது.
இதையடுத்து மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் அணுகுண்டு சோதனை மற்றும் அணு ஆயுதத் தயாரிப்புக்கள் குறித்து பல்வேறுஆராய்ச்சிகள் மேற்கொண்டனர்.
இங்குள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகளின் இறுதியில், 200 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதங்களை இந்தியாவால், தயாரிக்கமுடியும் என்று நிருபித்துள்ளனர்.
1998 ம் ஆண்டு பொக்ரானில் நடத்திய அணு குண்டு வெடிப்புச் சோதனை ஈடுஇணையற்றது. அப்போது, அணுகுண்டு சோதனை நடத்தியதிலிருந்து, இந்தியா அணுஆயுதங்கள் தயாரிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகத் துரிதமான முன்னேற்றம் கண்டு வருகிறது என்றார் சிதம்பரம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications