விடுதலைப் புலிகள், ராணுவம் கடும் சண்டை: 11 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் இரு தரப்பிலும் மொத்தம் 11பேர் இறந்தனர்.

வன்னி பகுதியில் உள்ள புதுகுளம் என்ற இடத்தில் ராணுவத்தினர் சென்றகொண்டிருந்த டிராக்டர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவத்தினர்கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இடட்டாரலை என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது புலிகள் ராக்கெட்தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவத்தினர் இறந்தனர்.

புலனருவா என்ற இடத்தில் காயமடைந்த போலீஸ்காரரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில். 2ராணுவத்தினர் இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

அதே நேரத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் மட்டுவில் மற்றும் நாகர்கோவில் ஆகியஇடங்களில் ராணுவத்தினரின் தாக்குதலில் மொத்தம் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.

இச் சம்பவங்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+