தாலுகா அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாகின்றன
நாகர்கோவில்:
தமிழகத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் டிசம்பர் மாதத்துக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்றுதமிழக வருவாய் நிர்வாக சிறப்பு ஆணையர் சத்ர சாய் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கம்ப்யூட்டர் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும்கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் படித்த 20, ஆயிரத்துக்கும்மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்களில் நலத்திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக ரூ4000 கோடி செலவழித்துள்ளது. முதியோர் உதவித்தொகை குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொழில்துறையில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் 2 வது இடத்தில் உள்ளது.நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து தாலுகா அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் சில பகுதிகளைப் பிரித்து புதிய மாவட்டம் 2001 மார்ச்சுக்குள் உருவாகும்.இதற்காகத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றார் சத்ரசாய் சிங்.












Click it and Unblock the Notifications