ஜெயசூர்யா சாதனை .. இந்தியாவுக்கு வேதனை .. இலங்கைக்குக் கோப்பை
ஷார்ஜா:
ஷார்ஜா கோப்பையை இலங்கை வென்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிஆட்டத்தில் இந்தியாவை 245 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது.
இலங்கை கேப்டன் ஜெயசூர்யா அதிரடி ஆட்டம் ஆடி தனது அணிக்கு வெற்றித் தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து பந்துவீச்சில் வாஸ், முரளிதரன் இருவரும் தங்களதுபங்குக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்கு கொண்டனர்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஜெயசூர்யா சிறப்பாக ஆடி 189ரன்கள் எடுத்தார்.
ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில்அடிக்கப்பட்ட 3-வது அதிகபட்ச ஸ்கோர், ஒருநாள் போட்டியில் ஜெயசூர்யாவின்அதிகபட்ச ஸ்கோர், ஷார்ஜாவில் ஜெயசூர்யா அடித்த முதல் சதம், 40 ஒருநாள்ஆட்டங்களுக்குப் பிறகு ஜெயசூர்யா அடித்த சதம் என பல சாதனைகள்படைக்கப்பட்டன.
அது தவிர இன்னும் 5 ரன்கள் எடுத்திருந்தால் ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்டஅதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை ஜெயசூர்யா படைத்திருப்பார். ஆனால்,கங்குலியின் பந்து வீச்சில் அவர் விக்கெட் கீப்பர் தய்யாவால் ஸ்டம்ப் செய்யப்பட்டஆட்டமிழந்தார்.
இல்லையென்றால் நிச்சயம் புதிய சாதனையை அவர் படைத்திருப்பார். முன்னதாக 93ரன்கள் எடுத்திருந்தபோது சுனில் ஜோஷியின் பந்தை அடிக்க முற்பட்டு அவரிடமேகேட்ச் கொடுத்தார். ஆனால், அதைப் பிடிக்க ஜோஷி தவறிவிட்டார்.
அதன் பிறகு தன்னை அவுட்டாக்க அவர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்புகூட கொடுக்கவில்லை. இவற்றுடன் ஜெயசூர்யா மற்றொரு சாதனையையும்படைத்தார். ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் அவரும்சேர்ந்தார்.
அவருக்குப் பக்கபலமாக மற்றொரு முனையில் ஆடிய அர்னால்டு 52 ரன்கள்எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 50 ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 299 ரன்களை இலங்கை எடுத்தது.
இந்திய அணியில் டெண்டுல்கர் மட்டுமே சிறப்பாகப் பந்து வீசினார். அவர் 10ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஸாகீர் கான்,கங்குலி, ஜோஷி ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா, இலங்கை பந்துவீச்சாளர்களைச் சந்திக்க முடியாமல் வந்தவேகத்தில் அவுட்டாகிச் சென்றனர். இதனால் 26.3 ஓவரில் 54 ரன்களில் இந்தியா ஆல்அவுட்டானது.
இதன் மூலம் இலங்கை 245 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.இந்திய அணி இதற்கு முன் இவ்வளவு மோசமான தோல்வியைச் சந்தித்ததில்லை.
ஒருநாள் போட்டியில் இந்தியா எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவே ஆகும். இந்தியஅணியில் ராபின் சிங் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் (11) எடுத்தார். மற்றவர்கள்ஒற்றை இலக்க ரன்னிலேயே அவுட்டானார்கள்.
இலங்கை அணியில் வாஸ் சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், முரளிதரன் 3விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷார்ஜா கிரிக்கெட்டில் இலங்கையிடம் இந்தியாமண்டியிட்டுத் தோற்றது என்றே கூறலாம்.
ஏனெனில் லீக் ஆட்டம், இறுதி ஆட்டம் என இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும்இந்தியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனையை நெருங்கி வந்து அவுட்டான ஜெயசூர்யா, ஆட்ட நாயகன் மற்றும்தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றார்.












Click it and Unblock the Notifications