சென்னையில் நவ. 3ல் ஜெ. ஊழலை விளக்கும் பேரணி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழலை விளக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்ட பேரணியை சென்னையில் வரும் நவம்பர் 3 ம் தேதி நடத்த,தென்சென்னை திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசியும், விமர்சித்தும் வருகிறார்.
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக கருணாநிதியைசிறையில் அடைக்கும் என்று தாக்கிப் பேசினார். இந்தப் பேச்சு திமுக வினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் கண்டனக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக எச்சரித்துள்ளது. இதற்கிடையே தென்சென்னை மாவட்டதிமுக வின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அறிவாலயத்தில் கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில் அடுத்த மாதம் 3 ம் தேதி சென்னையில் பேரணி நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பேரணியின் போது ஜெயலலிதாவின்ஊழல்கள் குறித்து பட்டியலிடப்பட்டு நாடகம் நடத்தப்படும். மேலும் ஜெயலலிதாவின் ஊழல்கள் குறித்து நோட்டீஸ் அச்சடித்து வீடு, வீடாகக்கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications