தீயில் கருகிய ரூ. 7 லட்சம் கம்ப்யூட்டர்கள்
கோவை:
கோவையில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள்எரிந்து சாம்பலானது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவைக்கு பல கடைகள்விடுமுறை விடப்பட்டிருந்தன. இதனையொட்டி, காந்திபுரம் 10-வது தெருவில் உள்ள சுரேஷ் என்பவருக்குச்சொந்தமான கம்ப்யூட்டர் சென்டரும் மூடப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தில் நள்ளிரவில் திடீரெனத் தீப்பிடித்தது. இதனால், அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள் எரிந்தன.இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அங்கிருந்தகம்ப்யூட்டர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கு அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications