தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் குவிந்த தலைவர்கள்
ராமநாதபுரம்:
விடுதலைப் போராட்டத் தியாகி மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 93 வதுபிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே தேவர் குருபூஜை விழா நடந்தது.
தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மத்திய விளையாட்டுத்துறைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மேற்குவங்காள மாநில துணை சபாநாயகர் அனில் முகர்ஜி உள்பட பல்வேறுதலைவர்கள் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு அஞ்சலி செய்தனர்.
மதுரையில் ..
மதுரையில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் ரஹ்மான்கான் ஆகியோர்கலந்து கொண்டனர்.
மதுரையில் 5000 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். விழாவில் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும்ஏற்படவில்லை.
சென்னையில் ..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக, தமாகா, எம்ஜிஆர்கழகம் மற்றும் எம்ஜிஆர் அதிமுக தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,தா.கிருட்டிணன், முல்லை வேந்தன், சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி நடந்ததேவர் குருபூஜை பொங்கல் விழாவை மூப்பனார் தொடங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அதன் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் ஆகியோர் தேவர்சிலைக்கு மாலை அணிவித்தனர்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசு, ராஜீவ் காங்கிரஸ் சார்பில் கிள்ளிவளவன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். தேவர் பேரவை சார்பில்நடத்தப்பட்ட ஊர்வலத்தை திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications