இந்து முன்னணி, கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல்
திருப்பூர்:
திருப்பூரில் இந்து முன்னணி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேர்காயமடைந்தனர்.
திருப்பூர் வெள்ளியங்காட்டில் ஜனநாயக வாலிபர் சங்க அலுவலகத்தில் 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அலுவலகம்முழுவதும் சேதமடைந்தது. இந்த அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ராஜ், ஆறுமுகம் உள்பட 4 பேர்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் (21), ராஜேந்திரன் (25), அப்புசாமி (23), கிருஷ்ணமூர்த்தி (24) ஆகியோரைப் போலீசார்கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு நண்பர்களிடையே இருந்த முன்விரோதம் காரணம் எனக் கூறப்படுகிறது. ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இருந்து இந்து முன்னணியில் சிலர்சேர்ந்துள்ளனர். இதன் பின்பும், இவர்களுக்கு இடையே நட்பு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்திலிருந்து சென்ற நண்பர் ஒருவர் ஒரு புது பைக்வாங்கியுள்ளார்.
இதைப் பார்த்த ஜனநாயக வலிபர் சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகாரறு ஏற்பட்டுள்ளது. புது வண்டியைவாங்கிய நண்பரை மற்றவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவரைப் பார்க்க வந்த மற்ற இந்து முன்னணி நண்பர்கள், ஆத்திரமடைந்து ஜனநாயக வாலிபர் சங்க அலுவலகத்தின் மீது தாக்குதல்நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அலுவலகம் சேதமடைந்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications