மலேசியா, சிங்கப்பூரில் சொத்து சேர்த்த ஜெ.
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்பது குறித்தான ஆதாரங்கள் சென்னை முதல்தனி நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ளன.
இந்த சொத்துக்கள் குறித்தான விவரங்களை சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசுகள், இந்திய வெளியுறவுத் துறை மூலமாக, தனி நீதிமன்றத்துக்குஅனுப்பியுள்ளன.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவையனைத்தும் சென்னை தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
முதல்வர் பதவியில் இருந்தபோது இவர் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளதாக, தமிழக அரசு,தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதை விசாரித்த தனிநீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரில் உள்ள சொத்து விவரங்கள் குறித்து கணக்கெடுத்து அனுப்புமாறுமலேசியா மற்றும் சிங்கப்பூர் அரசிடம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் இரு நாட்டு அரசுகளும் ஜெயலலிதா, சசிகலா பேரில் உள்ள சொத்துக்கள் குறித்தான விவரங்களை கொரியர்மூலம் சென்னை தனி நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து விரைவில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications