மக்கள் துணையோடு கருணாநிதி சதிகளை தகர்ப்பேன்
சென்னை:
கருணாநிதி செய்யும் பாதகங்களை மக்கள் துணையோடு தகர்ப்பேன் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொதுக்குழு,முதல்வர் கருணாநிதியின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது.சிறையில் பூட்டப்படுவார் என்றதும் ஆரம்பத்தில் சீற்றம் அடைந்து முடிவில்நடுநடுங்கி பயந்து போய் நிற்கிறார்.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி, பாண்டிச்சேரியில் அதிமுக ஆட்சி என்பதன்அர்த்தத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாமல் அவருக்கு ஆத்திரம் அதிகரித்துவிட்டது.
பொய் முகமூடிகளைப் புனைந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை நடத்த முயலும்கருணாநிதியின் தந்திரம் மக்களிடம் போணியாகாத நிலையில் கோமாளியைப் போல்பொதுக்குழு தீர்மானங்களை கேலி செய்கிறார்.
வார்த்தை ஜாலக் கோணிப் பைக்குள் குடியிருப்பது கருணாநிதிக்கு பழக்கமே தவிர,அதிமுகவுக்கு அல்ல.
கருணாநிதி குடும்பம், அமைச்சர் நேருவின் குடும்பம் சாதாரண ரேஷன் அரிசியில்1400 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததற்கு இதுவரை எந்த விசாரணையும்நடக்கவில்லை என்ற அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் என்ன?
ஆளுங்கட்சி, ஒரு எதிர்க் கட்சித் தலைவரை எதிர்த்து பேரணி, கண்டனக் கூட்டம் என்றபெயரில் வன்முறைக்கு வித்திடும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கருணாநிதி பேசி வருகிறார்;எழுதி வருகிறார். சொத்துக்களை மாற்றிக் கொள்ளத் தயாரா என்று கேட்டேன்.இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. கருணாநிதியும், ஸ்டாலினும் சொத்துக்கணக்கை இதுவரை காட்டியிருக்கிறார்களா?
எம்ஜிஆர் சுட்டிக் காட்டிய தீய சக்தியாம் கருணாநிதி இனி நாட்டுக்கு தீங்குசெய்யாமல் ஆயுட்காலம் வரை சிறையில் இருக்க வேண்டும். அதற்காக அவர் நீண்டநாள் உயிர் வாழ வேண்டும் என்று நான் பேசியதை அவருக்கே உரித்தான குதர்க்கபுத்தியுடன் சிந்தித்துள்ளார்.
அதிமுகவின் பிறவிப் பயன் முதல்வர் கருணாநிதியை ஒழிப்பது தான் என்றால்ஆளையே அழிப்பது என்று விளக்கம் கொடுக்கும் அளவுக்கு புத்தி தடுமாற்றம்அடைந்துள்ளார் அவர். கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்தே பழக்கப்பட்டஎனக்கு அவரது புதிய சதிகளை வேரறுக்கவும் முடியும்.
சலசலப்புக்கு அஞ்சாமல் கருணாநிதியின் பாதகங்களை மக்கள் உறுதுணையோடுதகர்ப்பேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications